ஆட்டத்தின் துவக்கம் முதலே கொல்கத்தா வீரர்களின் ஆதிக்கமே ஓங்கியிருந்தது.முதல் 13-வது நிமிடத்தில் அந்த அணியின் ஹெல்டர் போஸ்டிகா அபாரமாக கோல் அடித்தார். அதன்பின்னர் சுதாரித்துக் கொண்ட சென்னை அணி, 31-வது நிமிடத்தில் சென்னை வீரர் ஜீஜி லால்பெக்குலா அசத்தலான கோலை அடித்து சமன் செய்தார்.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் இரு அணி வீரர்களும் முன்னிலை பெறுவதற்காக தீவிரம் காட்டினர். ஆட்டம் சமனில் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 70-வது நிமிடத்தில் கொல்கத்தா வீரர் ஹெல்டர் போஸ்டிகா கோல் அடித்தார். 76-வது நிமிடத்தில் வால்டோவும் தன் பங்குக்கு கோல் அடிக்க, கொல்கத்தா அணி 3-1 என வலுவான முன்னிலை பெற்றது.
அதன்பின்னர் இரு தரப்பிலும் கோல் அடிக்கவில்லை. சென்னை அணிக்கு 89-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதனை சரியாகப் பயன்படுத்திய இலனோ, அபாரமாக பந்தை கோல்கம்பத்திற்குள் செலுத்தினார். அதன்பின்னர் இரு தரப்பிலும் கோல்கள் அடிக்கவில்லை. இதனால், 3-2 என கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. போட்டியின் சிறந்த வீரராக ஹெல்டர் போஸ்டிகா தேர்வு செய்யப்பட்டார்.