ஐபிஎல் டி20: டெல்லியை வீழ்த்தியது மும்பை

Ilavarasan

வெள்ளி, 23 மே 2014 (20:32 IST)
இன்று நடந்த ஐபிஎல் போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது மும்பை இண்டியன்ஸ்.
 
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 51 வது தகுதிச்சுற்று ஆட்டம் இன்று மும்பையில் பகல் இரவு ஆட்டமாக நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை -டெல்லி அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
 
இதனையடுத்து களம் இறங்கிய மும்பை அணி 19.3 ஓவரில் 173 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. மும்பை அணியில் அதிகபட்சமாக மைக் ஹசி 56 ரன்களும், சிம்மன்ஸ் 35 ரன்களும், ரோகித் சர்மா 30 ரன்களும் குவித்னர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். டெல்லி அணி தரப்பில் சிற்ப்பாக பந்து வீசிய இம்ரான் தகிர் அதிகபட்சமாக 3விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
 
இதனையைடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
 
டெல்லி அணியில் அதிகபட்சமாக டுமினி 45 ரன்களும், பீட்டர்சன் 44 ரன்களும், திவாரி 41 ரன்களும் குவித்தனர் ஆட்ட நாயகன் விருது மும்பை அணியின் மைக் ஹசிக்கு வழங்கப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்