இந்த நிலையில் கடைசி ஓவரில் இந்தியா வெற்றி பெற 7 ரன்கள் தேவைப்பட்டது. 1 விக்கெட்டு மட்டுமே கைவசம் இருந்த நிலையில் ஜடேஜா மற்றும் கேகே அகமது பேட்டிங் செய்தனர். முதல் பந்தில் ரன் ஏதும் இல்லை, இரண்டாவது பந்தில் ஒரு பவுண்டரி சென்றதால் வெற்றி பெற 3 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. 3வது பந்தில் ஒரு ரன்னும், 4வது பந்தில் 1 ரன்னும் அடித்த நிலையில் ஸ்கோர் சமமானது. இந்த நிலையில் ஐந்தாவது பந்தில் ஜடேஜா அவுட் ஆனதால் போட்டி 'டை' ஆனது.