யூத் ஒலிம்பிக் போட்டி: மல்யுத்தத்தில் வெள்ளி பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை
ஞாயிறு, 14 அக்டோபர் 2018 (15:48 IST)
யூத் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனை சிம்ரன் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
3-வது யூத் ஒலிம்பிக் போட்டி அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் நடந்து வருகிறது. இதில் 206 நாடுகளின் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் நேற்று பெண்களுக்கான மல்யுத்தப் போட்டியின் இறுதிச்சுற்று நடைபெற்றது. 43 கிலோ எடைப்பிரிவினருக்காக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய வீராங்கனை சிம்ரன், அமெரிக்க வீராங்கனை எமிலி ஷில்சனுடன் மோதினார்.
தொடக்கத்தில் அதிரடியாக விளையாடிய சிம்ரன், பின்னர் எமிலியின் அட்டாக்கை தாக்குபிடிக்க முடியாமல் 6-11 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியை தழுவி வெள்ளிப்பதகத்தை கைப்பற்றினார்.