ரோஹித் சர்மா, விராத் கோஹ்லி அபாரம். இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது இந்தியா

வியாழன், 15 ஜூன் 2017 (21:40 IST)
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது அரையிறுதி போட்டி இன்று இந்தியா மற்றும் வங்க தேச அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது.



 


இதனால் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்கள் எடுத்தது. இதனால் 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்தியா களமிறங்கியது

தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 46 ரன்கள் அதிரடியாக அடித்து நல்ல ஆரம்பம் கொடுக்க அடுத்து களமிறங்கிய விராத் கோஹ்லி, ரோஹித் சர்மாவுடன் இணைந்து 40.1 ஒவர்களில் 265 ரன்கள் எடுத்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. ரோஹித் சர்மா 123 ரன்களும் விராத் கோஹ்லி 96 ரன்களும் எடுத்தனர்.

இந்த வெற்றியை அடுத்து வரும் ஞாயிறு அன்று இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் இறுதிப்போட்டியில் மோதுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்