அரையிறுதியில் அபாரம்: ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய வீராங்கனைகள்

வெள்ளி, 21 ஜூலை 2017 (00:23 IST)
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வலுவான ஆஸ்திரேலிய அணியை இந்திய மகளிர் அணி வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. 



 
 
முதல் அரையிறுதியில் இங்கிலாந்து வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில் இன்று டெர்பே நகரில் ஆஸ்திரேலியா-இந்தியா அணிகளுக்கு இடையே 2வது அரையிறுதி போட்டி நடந்தது.
 
மழை காரணமாக 42 ஓவர்களாக குறைக்கப்பட்ட நிலையில் இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்தது. கெளர் அபாரமாக விளையாடி ஆஸ்திரேலிய பந்துவீச்சை அடித்து நொறுக்கி 115 பந்துகளில் 171 ரன்கள் குவித்தார். இதனால் இந்திய அணி 42 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 281 ரன்கள் எடுத்தது
 
282 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விரட்டிய ஆஸ்திரேலிய அணி இந்திய வீராங்கனைகளின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல்40.1 ஓவர்களில் 245 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 36 ரன்களில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்