2வது இன்னிங்ஸில் மளமளவென விக்கெட்டுக்களை இழக்கும் இந்தியா.. டார்கெட் எவ்வளவு?

Mahendran

ஞாயிறு, 28 ஜனவரி 2024 (13:37 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே ஹைதராபாத்தில் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் இந்திய அணைக்கு 231 ரன்கள் இலக்காக கொடுக்கப்பட்டுள்ளது. 
 
இங்கிலாந்து அணி முதலாவது இன்னிங்சில் 246 ரன்கள் எடுத்த நிலையில் இரண்டாவது இன்னிங்சில் 420 ரன்கள் எடுத்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 436 ரன்கள் எடுத்த நிலையில் அந்த அணிக்கு 231 இலக்காக கொடுக்கப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் சற்றுமுன் இந்திய அணியும் மளமளவென மூன்று விக்கெட்டுகளை இழந்து விட்டதை அடுத்து வெறும் 66 ரன்கள் தான் எடுத்து உள்ளது. இன்னும் இந்திய அணி வெற்றி பெற  165 ரன்கள் எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்திய அணியின் ரோகித் சர்மா, ஜெயிஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஆகிய மூவரும் குறைந்த ரன்களில் விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில் தற்போது கேஎல் ராகுல் மற்றும் அக்சர் பட்டேல் ஆகிய இருவரும் விளையாடி வருகின்றனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்