189 இலக்கை அடைய திணறும் இந்தியா.. 4 விக்கெட் விழுந்ததால் பரபரப்பு..!

வெள்ளி, 17 மார்ச் 2023 (18:39 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 188 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் தற்போது 189 என்ற இலக்கை நோக்கி இந்தியா விளையாடி வரும் நிலையில் 64 ரன்களுக்கு அடுத்தடுத்து நான்கு விக்கெட்டுகளை இழந்து விட்டது. இஷான் கிஷான் 3 ரன்களிலும்,  விராட் கோலி 4 ரன்களிலும், சூரியகுமார் யாதவ் ரன் ஏதும் அடிக்காமல் அவுட் ஆகினர். சுப்மன் கில் மட்டும் 20 ரன்கள் எடுத்து அவுட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் தற்போது கேஎல் ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரும் விளையாடி வரும் நிலையில் இந்த இருவரின் கையில் தான் வெற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் இந்திய அணிக்கு வெற்றியை தேடி வருவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்