மகளிர் ஐபிஎல்: டாஸ் வென்ற குஜராத் அணி எடுத்த அதிரடி முடிவு..!

சனி, 18 மார்ச் 2023 (19:48 IST)
கடந்த சில நாட்களாக மகளிர் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் மும்பை அணியை உபி அணி வீழ்த்தியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இன்றைய இரண்டாவது போட்டியில் குஜராத் மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் குஜராத் அணி டாஸ் வென்றதை அடுத்து முதலில் பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியை சற்று முன் ஒரு விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
குஜராத் அணி ஏற்கனவே ஆறு போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டிகளில் வெற்றி அடைந்து நான்கு புள்ளிகள் எடுத்து புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. 
 
பெங்களூர் அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று இரண்டு புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் பெங்களூர் அணி வெற்றி பெற்றால் ஒரு இடம் முன்னேற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்