ரோஜர் பெடரர் மற்றும் ரபேல் நடால் ஆகிய இருவரும் உலக டென்னிஸ் தர வரிசையில் உள்ள முன்னணி வீரர்களாக உள்ளனர். இவர்கள் இருவரையும் டென்னிஸ் களத்தில் எதிரும் புதிருமாகப் பார்த்துப் பழகிய நமக்கு இவர்கள் இருவரும் ஒரே இடத்தில் அமர்ந்து ஒன்றாக பேசிச் சிரித்து, டென்னிஸ் போட்டியை பார்த்துக்கொண்டிருக்கும் வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.