மூன்று மேட்ச் டேயும் முடிந்தது; நாக் அவுட் 16 அணிகள் பட்டியல்! – ஈரோ உலகக்கோப்பை கால்பந்து!

வியாழன், 24 ஜூன் 2021 (16:23 IST)
ஈரோ உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் மூன்று மேட்சேடே ஆட்டங்களிலும் வெற்றி பெற்று நாக் அவுட் சுற்று செல்லும் அணிகள் பட்டியல் வெளியாகியுள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஈரோ உலகக்கோப்பை கால்பந்து போட்டி தற்போது தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. 24 நாட்டு அணிகளுக்கு இடையே நடந்த மூன்று மேட்ச்டே ஆட்டங்களில் வெற்றிபெற்ற அணிகளில் தரவரிசைப்படி 16 அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நாக் அவுட் சுற்றில் 16 அணிகளுக்கும் இடையே 8 போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் தேர்வாகும் 8 அணிகளுக்கிடையே 4 கால் இறுதி போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த நாக் அவுட் 16 அணிகளில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் உட்பட ஜெர்மனி, போர்ச்சுக்கல், இத்தாலி, இங்கிலாந்து உள்ளிட்ட அணிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த போட்டிகளில் பெல்ஜியம் – போர்ச்சுக்கல், இங்கிலாந்து – ஜெர்மனி, பிரான்ஸ் – ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட மோதல்கள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்