ரோனால்டோவை தொடர்ந்து பீர் பாட்டிலை நகர்த்திய மற்றொரு வீரர்

வியாழன், 17 ஜூன் 2021 (14:32 IST)
கால்பந்து வீரர் பால் போக்பா, ஹெய்னெகன் பீர் பாட்டிலை நகர்த்தியது சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

 
செய்தியாளர் சந்திப்பின்போது கோகோ கோலா பாட்டில்களை நகர்த்திவிட்டு, `தண்ணீர் குடியுங்கள்` என கூறிய கால்பந்து வீரர் கிறிஸ்டியான ரொனால்டோவின் காணொளி வைரலான ஓரிரு நாளில் மற்றொரு கால்பந்து வீரர் பால் போக்பா, ஹெய்னெகன் பீர் பாட்டிலை நகர்த்தியது சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.
 
ஃபிரான்ஸை சேர்ந்த 28 வயது பாக்போ இஸ்லாமியர் ஆவார். செய்தியாளர் சந்திப்பில் எதுவும் பேசாமல் ஆல் கஹால் அற்ற அந்த பீர் பாட்டிலை மேசையின் கீழே எடுத்து வைத்தார். யூரோ 2020-ல் க்ரூப் எஃப் பிரிவில் ஜெர்மனிக்கு எதிராக ஃபிரான்ஸ் அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஹெய்னகன் `ஸ்டார் ஆஃப் த மேட்ச் விருதை பெற்றார் பாக்போ.
 
கோகோ கோலா மற்றும் ஹெய்னகன் பீர் ஆகிய இரண்டும் தங்களின் முக்கிய ஸ்பான்சர்கள் என்றாலும் ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு யூனியன் வீரர்களின் செயல்களை ஒரு பிரச்னையாக கருதவில்லை. இருப்பினும் ரோனால்டோவின் செயலால் கோகோ கோலா தனது சந்தை மதிப்பில் 4 பில்லியன் அமெரிக்க டாலர்களை இழந்துள்ளது. கோகோ கோலா நிறுவனத்தின் மொத்த மதிப்பு 240பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
 
“தாங்கள் என்ன குடிக்க வேண்டும் என்பதை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் ஒவ்வொருவருக்கும் உண்டு” என கோகோ கோலா இதுகுறித்த அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தது. மேலும் ஓவ்வொரு தனிப்பட்ட நபருக்கும் தனிப்பட்ட “விருப்பமும் தேவைகளும்” இருக்கும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்