இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்.. 4 ஸ்பின்னர்களுடன் இங்கிலாந்து அணி அறிவிப்பு..!

செவ்வாய், 12 டிசம்பர் 2023 (07:52 IST)
இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் விளையாடி வருகிறது என்பதும் இன்று இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது என்பதும் தெரிந்தது. 
 
 இந்த நிலையில் இங்கிலாந்து அணி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி  ஜனவரி 25ஆம் தேதி தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இந்த டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து அணியின் முழு விவரம் இதோ: 
 
பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ரெஹான் அகமது, ஜேம்ஸ் ஆண்டர்சன், கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோ, ஷோயப் பஷீர், ஹாரிபுரூக், ஸாக் கிராவ்லி, பென் டக்கெட், பென் ஃபோக்ஸ், டாம் ஹார்ட்லி, ஜாக் லீச், ஆலி போப், ஆலி ராபின்சன், ஜோ ரூட், மார்க் வுட்.
 
இதில் டாம்ஹார்ட்லி, ஷோயப் பஷீர், ஜாக் லீச், ரெஹான் அகமது ஆகிய நால்வரும் சுழற்பந்து வீச்சாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
முதல் டெஸ்ட் போட்டி: ஜனவரி 25-29
இரண்டாவது டெஸ்ட் போட்டி: பிப்வரவரி 2-6
மூன்றாவது டெஸ்ட் போட்டி: பிப்ரவரி 15-19
நான்காவது டெஸ்ட் போட்டி: பிப்ரவரி 23-27
ஐந்தாவது டெஸ்ட் போட்டி: மார்ச் 7-11
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்