தீபா கர்மாகருக்கு கேல் ரத்னா விருது : மத்திய அரசு பரிந்துரை

வியாழன், 18 ஆகஸ்ட் 2016 (16:29 IST)
ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்று 4வது இடம் பிடித்து நூலிழையில் பதக்கத்தைத் தவறவிட்ட ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர், துப்பாக்கிச் சுடுதல் வீரர் ஜித்து ராய் ஆகியோர் ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
 

 
விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது 1991ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
 
மேலும் கிரிக்கெட் வீரர் அஜிங்க்யா ரகானா, பில்லியர்ட்ஸ் விளையாட்டு வீரர் சவ்ரவ் கோத்தாரி, வில் வித்தை வீரர் ரஜத் சௌகான் ஆகியோருக்கும் அர்ஜுனா விருது வழங்கப்படவுள்ளது.
 
கடந்த ஆண்டு இந்த விருது டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு வழங்கப்பட்டது. 2008 மற்றும் 2014ம் ஆண்டுகளில் ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருது வழங்கப்படவில்லை. இதுவரை 28 விளையாட்டு வீரர்கள் இந்த விருதைப் பெற்றுள்ளனர்.
 
தடகள வீராங்கனை லலிதா பாபர், ஹாக்கி வீரர் வி.ரகுநாத், குத்துச்சண்டை வீரர் சிவ் தாபா, துப்பாக்கிச் சுடுதல் வீரர் அபூர்வி சந்தேலா ஆகியோர் அர்ஜுனா விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்