“எம்.எஸ்.தோனி-தி அன் டோல்ட் ஸ்டோரி” திரைப்படம் என் புகழ் அல்ல, எனது போராட்டங்கள், பயணங்கள் பற்றியது: தோனி

சனி, 17 செப்டம்பர் 2016 (12:09 IST)
இம்மாதம் 30-ம் தேதி உலகம் முழுதும் ரிலீஸ் ஆகும் “எம்.எஸ்.தோனி-தி அன் டோல்ட் ஸ்டோரி” திரைப்படத்தின் விளம்பர பரப்புதலுக்காக தன் மனைவி சாக்‌ஷி, படத் தயாரிப்பாளர் அருண் பாண்டே ஆகியோருடன் அமெரிக்கா சென்றுள்ளார் தோனி.

 
திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய தோனி, “நான் பாண்டேயிடம் ஒரு விஷயத்தை தெளிவாகக் கூறினேன், என்னை உயர்த்திப் பிடிக்கும், என் புகழ்பாடும் படமாக இது இருக்கக்கூடாது, ஒரு தொழில்பூர்வமான விளையாட்டு வீரனின் பயணத்தை சித்தரிப்பதாக இருக்க வேண்டும் என்றேன்” எனக் கூறினார் தோனி.
 
எடிட் செய்யப்படாத படத்தை முதன் முதலில் பார்த்த தோனி, அவரது வாழ்க்கையில் நடந்தது மீண்டும் நினைவில் புதிதாக பதிந்ததாக கூறினார். 
 
கடந்த காலத்தில் இருப்பது நல்ல உணர்வை ஏற்படுத்தியது. அதாவது மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன நினைத்தனர் என்பது தெரியவருகிறது. நான் என் பெற்றோரிடம் கிரிக்கெட் பற்றி ஒரு போதும் பேசியதில்லை. ஆனால் தற்போது இந்தப் படத்தைப் பார்த்த போது அவர்கள் என்னைப் பற்றி என்ன நினைத்தார்கள் என்பது தெரிய வந்தது ஒரு புதிதான விஷயமாக இருந்தது.
 
முதலில் என்னைப்பற்றிய படம் என்று சற்று கவலையடைந்தேன், ஆனால் படம் எடுக்கத் தொடங்கப்பட்டவுடன் நான் கவலைப்படவில்லை, நான் என் தரப்பு கதையைக் கூறத் தொடங்கினேன் என தோனி தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்