காத்திருந்த பாட்டியை காண வந்த ’தோனி’ ! சுவாரஸ்ய வீடியோ

வியாழன், 4 ஏப்ரல் 2019 (13:32 IST)
நீண்ட காலத்திற்குப் பிறகு நம் இந்தியக் கிரிக்கெட் அணிக்கு உலகக் கோப்பையை பெற்றுத் தந்த பெருமைக்குரியவர் தோனி. இவரது ’ஹெலிகாப்டர் சாட்டைக்’ காண மைதானத்திற்கு இளைஞர் பட்டாளமே படையெடுத்துவரும்.
மற்ற எந்த வீரருக்கும் இல்லாத ஒரு சிறப்பு தோனிக்கு உண்டு மேட்சில் அணி எந்த நிலையில் இருந்தாலும் பதறாமல் நிதானமாக அடி எடுத்து வைத்து களம் காண்பார். அதனால் இவரைக் ’கூல் கேப்டன்’(cool captain)  என்று அழைப்பார்கள்.
 
தற்போது ஐபிஎல் சீசன் நடந்து வருகிறது. இதில் சென்னை சூப்பர கிங்ஸ் அணிக்காக தோனி விளையாடி வருகிறார். 
 
இந்நிலையில் மும்பை வான்கடே மைதானத்தில் தோனி வந்து விளையாடுவதைப் பார்க்கவே காத்திருந்த வயதான பாட்டி தன் பேத்தியுடன் போட்டியைக் காண வந்தார். போட்டி முடிந்த  பின் தான் தோனியை சந்திக்க விரும்புவதாக அதிகாரிகளிடம் கூறினார். அதை அவர்கள் தோனியிடம் தெரிவித்தனர்.

பின்னர் தோனி பாட்டியைச் சந்தித்துப் பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
 
இந்தப் போட்டியில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி, 37 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வியைத் தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்