தோனியை நெருங்கிய அந்த ரசிகர் தோனியின் காலுக்கருகில் தேசியக் கொடியை வைத்துவிட்டு தோனிக் காலில் விழுந்தார். அப்போது தோனி உடனே அவசரமாக கீழே வைக்கப்பட்டிருந்த கொடியை மேலே எடுத்து தேசியக் கொடிக்கு அவமரியாதை ஏற்படாமல் பார்த்துக்கொண்டார். அதன் பின் ரசிகரை மேலேத் தூக்கி அவரைத் துரத்தி வந்த பாதுகாப்பு வீரர்களிடம் அந்த ரசிகரை ஒப்படைத்த தோனி பத்திரமாக தேசியக் கொடியையும் அவர்களிடம் ஒப்படைத்தார்.
இந்தக் காட்சிகள் அங்குள்ள் ராட்சதத் திரைகளில் ஒளிப்பரப்பானப் போது இந்திய ரசிகர்கள் மட்டுமல்லாது நியுசிலாந்து ரசிகர்களும் தோனியின் செயலைப் பார்த்து ஆரவாரம் செய்தனர். வர்ணனையாளர்களும் தோனி தேசியக் கொடி மீது வைத்துள்ள மரியாதையைப் புகழ்ந்து கூறினர். இந்த வீடியோக் காட்சிகள் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி தோனி ரசிகர்களை தோனிப் புகழ்பாட வைத்திருக்கிறது.
ஏற்கனவே ஒருப் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஹெல்மெட்டில் தேசியக்கொடி பதிக்காதது குறித்த கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த தோனி ‘நான் விக்கெட் கீப்பிங் செய்யும் போது சில நேரம் ஹெல்மெட்டைக் கீழே வைக்க வேண்டிய சூழல் வரும். அது தேசியக் கொடியை அவமதிப்பது போலாகும். அதனால்தான் நான் ஹெல்மெட்டில் தேசியக் கொடியை அணிவதில்லை’ எனப் பதிலளித்து அனைவரின் உள்ளங்களையும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.