அடித்து துவம்சம் செய்த வார்னர்: மூன்று சதம் அடித்து சாதனை!

சனி, 30 நவம்பர் 2019 (13:05 IST)
ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முச்சதம் அடித்து டேவிட் வார்னர் சாதனை படைத்தார்.

ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் இடையேயான டெஸ்ட் தொடரின் இரண்டாவது ஆட்டம் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியா ஆரம்பம் முதலே அட்டகாசமான ஆட்டத்தை கொடுத்து வருகிறது.

முதல் நாள் ஆட்டத்தில் ஒரு விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் குவித்திருந்த ஆஸ்திரேலியா இரண்டாவது நாளான இன்று 500 ரன்களை தாண்டி 600 ரன்களை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் தொடர்ந்து இரண்டு நாட்களாக விக்கெட் இழக்காமல் ஆடி 300 ரன்களுக்கும் மேல் அடித்து புதிய சாதனையை படைத்துள்ளார்.

கடந்த 2015ம் ஆண்டு நியூஸிலாந்துக்கு எதிராக 253 ரன்கள் அடித்ததே டேவிட் வார்னரின் அதிகபட்ச சாதனையாக இருந்தது. இன்று அந்த சாதனையை தானே முறியடித்து 300 ரன்களை தாண்டி முன்னேறி கொண்டிருக்கிறார் வார்னர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்