இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் கிரிக்கெட் 2012-13ம் ஆண்டு நடைப்பெறுவதாக இருந்தது. பிரச்னை காரணமாக அந்த போட்டி தொடர் நடைபெறவில்லை. இதையடுத்து இந்தியா, பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு வலியுறுத்தியது.
இந்நிலையில், இரு நாட்டு பிரச்னையும் விரைவில் சரியாகும். அவ்வாறு ஆன பின்பு போட்டிகள் நடைபெறும். அது வரை இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரை எதிர்பார்க்க முடியாது என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் சர்யார் கான் தெரிவித்துள்ளார்.