குழந்தை பிறந்த பிறகும் டென்னிஸ் விளையாடுவேன்- சானியா மிர்சா
சனி, 12 மே 2018 (13:48 IST)
டென்னிஸ் வீரங்கனை சானியா மிர்சா குழந்தை பிறந்த பிறகும் டென்னிஸ் விளையாடுவேன் என கூறியுள்ளார்.
இந்தியாவின் டென்னிஸ் விளையாட்டின் நம்பிக்கை நட்சத்திரமான சானியா மிர்சா, கடந்த 2010ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும் அவர் திருமணத்திற்கு பின்னரும் ஒரு இந்திய பெண்ணாக இருந்து, இந்தியாவுக்காக பல வெற்றிகளை பெற்று தந்தார். குறிப்பாக டென்னிஸ் போட்டி தரவரிசையில் முதல் இடம் பிடித்த இந்திய வீராங்கனை என்ற கவுரவத்தை பெற்றார்.
சானியா மிர்சாவை பெறுமை படுத்தும் விதத்தில் இந்திய அரசு இவருக்கு அர்ஜுனா விருது, பத்மஸ்ரீ விருது, ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது, பத்ம பூஷண் விருது உள்ளிட்ட விருதுகளை அளித்துள்ளது.
இவர் சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார். மேலும், பேபி மிர்சா மாலிக் என்று குறிப்பிட்டு இரு படத்தை வெளியிட்டிருந்தார். இவருக்கு வரும் அக்டோபர் மாதம் குழந்தை பிறக்கவுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இவர் குழந்தை பிறந்த பிறகும் டென்னிஸ் விளையாடுவேன் என கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது;-
“எனக்கு ஏற்பட்ட முழங்கால் காயத்தினால் கடந்த 6 மாத காலங்கலாக டென்னிஸ் விளையாடவில்லை. என்னை ஓய்வு எடுக்குமாறு எல்லோரும் பரிந்துரைத்தார்கள், அது சரியானது என்று நான் கூறமாட்டேன், ஆனால் அது நல்லது என்றார்.
மேலும், எனது வாழக்கையில் நாளை என்ன நடக்கும் என்று எனக்கு தெரியும் என கூறியிருந்தேன், அது கண்டிப்பாக இப்போது மிகவும் செயலற்றதாக தெரிகிறது. ஆனால் வாழ்க்கை உண்மையில் உங்களை எங்கு அழைத்துச் செல்கிறது என்பதைப் பார்க்க காத்திருக்க வேண்டும். மிக நிச்சயமாக, எனக்கு குழந்தை பிறந்த பிறகும் மீண்டும் விளையாட வருவேன் என கூறியுள்ளார்.