இந்த நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணியின் முக்கிய வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரருமான பிராவோ தற்போது சமூக ஊடகங்களில் கடந்த சில நாட்களாக சுறுசுறுப்பாக உள்ளார். இந்த நிலையில் அவர் சமீபத்தில் பாலிவுட் ரசிகர்களிடம் உரையாடியபோது எம்எஸ் தோனிக்காக சிறப்பு பாடல் ஒன்றை உருவாக்கி வருவதாக தெரிவித்துள்ளார்
இந்த பாடல் தோனிக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது என்றும், இந்த பாடலின் தலைப்பு எண் ’7’ என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். மேலும் தோனியின் வாழ்க்கை மற்றும் அவரது சாதனைகள் அனைத்தும் இந்த பாடலில் இருக்கும் என்றும் அவர் அவர் கூறியுள்ளார்