4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்குவது உசிதமானது என்றும் அவர்களில் ஒருவர் ஆல்-ரவுண்டராக இருப்பது அவசியம் என்றும் கோஹ்லி தெரிவித்தார். இந்திய பந்து வீச்சாளர்களின் தேர்வை குறை சொல்ல முடியாது என்றும் பேட்ஸ்மேன்கள் கணிசமான ரன்களை சேர்த்து இருந்தால் சுழற்பந்து வீச்சாளர்கள் வெற்றியை வசப்படுத்தி இருப்பார்கள் என்றும் தெரிவித்தார்