டெல்லிக்கு முக்கிய போட்டி.. டாஸ் வென்று பேட்டிங் எடுத்த பெங்களூரு..!

சனி, 6 மே 2023 (19:17 IST)
ஐபிஎல் தொடரின் ஐம்பதாவது போட்டி இன்று பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோத இருக்கும் நிலையில் பெங்களூர் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. 
 
இன்றைய போட்டியில் டெல்லி அணிக்கு மிகவும் முக்கியமான போட்டி ஆகும். அந்த அணி தற்போது மூன்று வெற்றிகள் மட்டுமே பெற்றுள்ள நிலையில் இன்றைய போட்டி உள்பட  மீதம் உள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்று செல்ல முடியும் என்ற நிலையில் டெல்லி அணியில் உள்ளது. 
 
ஆனால் அதே நேரத்தில் பெங்களூர் அணியை பொருத்தவரை 10 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் இருப்பதால் அந்த அணி இன்றைய போட்டிகள் வெற்றி பெற்றால் மூன்றாவது இடத்திற்கு விரைந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கதிர். இன்றைய போட்டியில் வெல்லும் அணி எது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்