இங்கிலாந்துக்கு சென்றுள்ள பாகிஸ்தான் அணி ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளையும் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி நேற்று மூன்றாவது போட்டியையும் வென்று தொடரை வென்றுள்ளது. இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி பாபர் ஆசமின் அற்புதமான சதத்தால் 332 ரன்கள் சேர்த்தது. அவர் சிறப்பாக விளையாடி 158 ரன்கள் சேர்த்தார்.