வங்கதேசத்திடம் சிக்கி தவிக்கும் ஆஸ்திரேலியா

திங்கள், 28 ஆகஸ்ட் 2017 (19:49 IST)
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் போட்டியில் தடுமாறி வருகிறது.


 

 
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது ஆஸ்திரேலிய அணி. முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேச அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது.
 
வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 260 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இதைத்தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி ஆரம்பத்திலே அதிர்ச்சியை சந்தித்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 18 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.
 
இரண்டாவது நாளான இன்று தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 217 குவித்தது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 43 ரன்கள் பின்னிலையில் உள்ளது. இன்றைய ஆட்ட முடிவில் வங்கதேச அணி 1 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் குவித்துள்ளது.
 
உலக கிரிக்கெட்டில் ஜாம்பவனாக வலம் வரும் ஆஸ்திரேலிய அணி குட்டி அணியான வங்கதேசத்திடம் சிக்கி தவித்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்