ஆஸ்திரேலியாவில் 70-வது சுதந்திர தின விழாவை மகளுடன் கொண்டாடிய ஐஸ்வர்யா ராய் - வீடியோ!!

சனி, 12 ஆகஸ்ட் 2017 (17:38 IST)
பாலிவுட் ஸ்டார் ஐஸ்வர்யா ராய் 2007ஆம் ஆண்டு ராய் இந்தி நடிகரும் அமிதாப் பச்சனின் மகனுமான அபிஷேக் பச்சனை மணமுடித்தார். மேலும் ஐஸ்வர்யா ராய் உலக அழகியாக இருந்தவர் என்பது அனைவருக்கும் தெரியும். சில இடைவெளி விட்டு ஏக் தில் ஹாய் முஷ்கில் படம் மூலம் மீண்டும் எண்ட்ரி கொடுத்தார்.

 
இவர் நடிகர் அமிதாப் பச்சனின் மகனான அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆரத்யா என்ற பெண் குழந்தை இருக்கிறார். இந்தியாவின் 70-வது சுதந்திர தின விழா ஆஸ்திரேலியாவில் கொண்டாடப்பட்டது.


 
 
இதில் ஐஸ்வர்யா தன் மகளுடன் கலந்து கொண்டார். அதில் ஆரத்யா நம் தேசியகீதத்தை பாடி அசத்தினார். இதை பலரும்  பாராட்டினர். இருவரும் தேசிய கொடியை பறக்கவிட்டனர். பின் பேசிய ஐஸ்வர்யா அனைவருக்கும் நன்றி என கூறினார்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்