177 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன ஆஸ்திரேலியா.. இந்தியா பேட்டிங்!

வியாழன், 9 பிப்ரவரி 2023 (15:05 IST)
177 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன ஆஸ்திரேலியா.. இந்தியா பேட்டிங்!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 177 ரன்களுக்கு ஆஸ்திரேலியா அணி ஆல் அவுட் ஆன நிலையில் தற்போது இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. 
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி வந்து 63.5 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழந்து 177 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக லாபுசாஞ்சே 49 ரன்கள் எடுத்தார்
 
இந்திய தரப்பில் ஜடேஜா ஐந்து விக்கட்டுகளையும் அஸ்வின் மூன்று விக்கட்டுகளையும் வீழ்த்தினர். இந்த நிலையில் சற்றுமுன் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை தொடங்கியுள்ளது. 
 
ரோகித் சர்மா மற்றும் கே எல் ராகுல் ஆகிய இருவரும் பேட்டிங் செய்து வருகின்றனர் என்பதும் ரோகித் சர்மா 9 வந்துகளில் மூன்று பவுண்டரிகள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்