கடந்த சில நாட்களாகவே அஸ்வின் தனது டுவிட்டரில் கிரிக்கெட் மட்டுமின்றி சமூக பிரச்சனைகள் குறித்தும் கருத்து தெரிவித்தார். ஜல்லிக்கட்டு, அதிமுக பிரச்சனைகள் குறித்து அவர் கூறிய கருத்துக்கள் பெரும் வரவேற்பினை பெற்றது. இந்நிலையில் அஸ்வின் காவிரி பிரச்சனை குறித்தும் தற்போது பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.