என் தந்தையைக் காப்பாற்றியது தடுப்பூசிதான்… கிரிக்கெட்டர் அஸ்வின் பதிவு!

திங்கள், 10 மே 2021 (08:56 IST)
இந்திய அணியின் சுழல்பந்து வீச்சாளர் அஸ்வின் தனது குடும்பத்தினர் கொரோனாவில் மீண்டது குறித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இந்தியாவில் கொரொனா இரண்டாவது அலையில் தொற்றுக்குச் சாதாரண மக்கள் முதல் அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள், உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின்,தனது குடும்பத்துடன் இருக்க வேண்டுமென்க் கூறி இந்த ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார்.

இந்நிலையில், அஸ்வின் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மேற்பட்டோருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில் இப்போது தனது குடும்பத்தினர் கொரோனாவால் பட்ட இன்னல்கள் பற்றி அவர் பேசியுள்ளார். அதில் ‘முதலில் என் குடும்பத்தினர் சிலருக்கு பிரச்சனை இருந்ததால் என் மனைவி என்னிடம் எதையும் தெரிவிக்கவில்லை. ஆனால் குழந்தைகளுக்கு 4 நாட்களுக்கு மேலாக வாந்தியும், வயிற்றுப்போக்கும் இருந்ததால் என்னிடம் கூறினார். முதலில் ஆரோக்யமாக இருந்த என் தந்தை சில நாட்களில் மூச்சுத்திணறலுக்கு ஆளானார். அவருக்கு இணை நோய்களும் இருந்தன. ஆனால் இரண்டு கட்டமாக கொரோனா வேக்ஸினை அவர் போட்டுக்கொண்டதால் மட்டுமே அவர் காப்பாற்றப்பட்டார். என் தந்தையைக் காப்பாற்றியது தடுப்பூசிதான். கொரோனாவில் இருந்து தப்பிக்க தடுப்பூசி மட்டுமே ஒரே வழி.’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்