திமுக அமைச்சருக்கு கொரோனா தொற்று!

திங்கள், 10 மே 2021 (08:23 IST)
திமுகவில் புதிதாக அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட எஸ் எஸ் சிவசங்கருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த அமைச்சரவைப் பதவியேற்பு விழாவில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். நீண்ட காலமாக அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்துக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் இல்லை என்று இருந்த நிலையில் அவருக்கு அளிக்கப்பட்ட பதவி அப்பகுதி மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இப்போது எஸ் எஸ் சிவசங்கருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் அவர் உடல் நிலை சீராக உள்ளதாகவும், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்