டென்னிஸ் வீரர் சோம்தேவ் தேவ்வர்மன், வட்டு எறிதல் வீராங்கனை கிருஷ்ண பூனியா, பி.வி.சிந்து (பேட்மின்டன்), விகாஸ் கவுடா (வட்டு எறிதல்) ஆகியோரது பெயர்கள் கேல் ரத்னா விருதுக்கான பரிசீலனையில் இருந்த நிலையில், இந்திய அணி முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையிலான தேர்வுக் குழுவினர் யாருடைய பெயரையும் பரிந்துரை செய்யவில்லை.
அர்ஜுனா விருது பெறும் 46 ஆவது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமை தமிழகத்தைச் சேர்ந்த அஷ்வினுக்கு கிடைக்க உள்ளது. டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 100 விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். அவர் இதுவரை 20 டெஸ்ட், 79 ஒருநாள் மற்றும் 25 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார்.