இதில், கடந்த ஆண்டு டெஸ்ட், ஒரு நாள் போட்டி, இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த விராட் கோஹ்லிக்கு சிறந்த சர்வதேச வீரருக்கான பாலி உம்ரிகர் விருது வழங்கப்பட்டது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் 2 சதம் அடித்ததுடன், 17 விக்கெட்களைக் கைப்பற்றி தொடர் நாயகன் விருதை வென்ற ரவிச்சந்திரன் அஸ்வின், திலிப் சர்தேசாய் விருது வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பரூக் இன்ஜினியரும் கலந்து கொண்டார். அவர் அஷ்வினிடம், கர்நாடகா தண்ணீர் பி.எஸ்.சந்திரசேகர், பிரசன்னா உள்ளிட்ட சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களை உருவாக்கியுள்ளது. கர்நாடகா தண்ணீரில் அப்படி என்ன இருக்கிறது? உங்கள் வெற்றிக்கு என்ன காரணம்?' என கேள்வி எழுப்பினார்.