3-வது டெஸ்ட்: அஸ்வின் சதம் அடுத்து கலக்கல்

வியாழன், 11 ஆகஸ்ட் 2016 (07:18 IST)
இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி செயின்ட் லூசியாவில் உள்ள கிராஸ் தீவின் டேரன் சமி தேசிய மைதானத்தில் நடைபெற்று வருகிறது.


 


டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள், பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் நாள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்தது. அஸ்வினும், சாகாவும் களத்தில் இருந்தனர். இரண்டாம் நாள் ஆட்டத்திலும், இருவரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 265 பந்துகளில் அஸ்வின் சதம் அடித்தார். சாஹா 223 பந்துகளில் சதம் அடித்தார். பிறகு, சாகா 104 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ரவிந்திர ஜடேஜா 6, புவனேஷ்வர் குமார் 0, என்று இந்திய வீரர்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர். அஸ்வின், பொறுப்பாக ஆடி 118 ரன்கள் எடுத்து, எதிர்பாராதவிதமாக கம்மின்ஸ் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். இஷாந்த் சர்மா டக் அவுட்டானார். முதல் இன்னிங்சில் இந்திய அணி 353 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. மேற்கிந்திய தீவுகள் அணிகள் சார்பில் ஜோசப், கம்மின்ஸ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்