தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய வார்னர் 69 ரன்களும் ஆரோன் பின்ச் 114 ரன்களும் அடித்தனர். இதனையடுத்து களமிறங்கிய ஸ்மித் அதிரடியாக 66 பந்துகளில் சதமடித்தார். அதுமட்டுமன்றி மேக்ஸ்வெல் 19 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து அதிரடி திருப்புமுனையை ஏற்படுத்தினார். மொத்தத்தில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 374 ரன்கள் எடுத்துள்ளது
இந்திய தரப்பில் முகமதுஷமி 3 விக்கெட்டுகளையும் பும்ரா, சயினி, சாஹல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர். இந்த நிலையில் 375 ரன் என்ற இமாலய இலக்கை நோக்கி இன்னும் சற்று நேரத்தில் இந்திய அணி களமிறங்க உள்ளது. இந்திய அணியில் தவான், மயங்க் அகர்வால், விராத் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா என நீண்ட பேட்டிங் வரிசை இருப்பதால் இந்த இலக்கை எட்டி விடும் என்றே கருதப்படுகிறது