ஜிம்பாவே அணிக்கு 290 ரன்கள் இலக்கு: சுப்மன் கில் அபார சதம்!

திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (16:20 IST)
இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது என்பதும் இதனையடுத்து இந்திய அணி களத்தில் இறங்கி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்திய பேட்ஸ்மேன் சுப்மன் கில்அபாரமாக விளையாடி 130 ரன்கள் அடித்து உள்ளார் என்பதும் இஷான் கிஷான் 50 ரன்கள் அடித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் 290 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் ஜிம்பாவே அணி விளையாட உள்ளது இந்த போட்டியை ஜிம்பாப்வே அணி வெல்லுமா அல்லது இந்திய அணி ஜிம்பாவே அணியை வாஷ் அவுட் செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்