வோஸ்னியாக்கி, கிளைஸ்டர்ஸ், லீ நா - 3வது சுற்றுக்கு தகுதி

புதன், 18 ஜனவரி 2012 (13:03 IST)
FILE
ஆஸ்ட்ரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் 3வது சுற்றுக்கு உலகின் நம்பர் 1 வீராங்கனையான கரோலின் வோஸ்னியாக்கி தகுதி பெற்றுள்ளார்.

இவருடன் கிம் கிளைஸ்டர்ஸ், சீனாவின் லீ நா ஆகியோரும் 3வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.ஜியார்ஜிய வீராங்கனை அனா ததிஷ்விலி என்பவரை 6- 1, 7- 6 என்ற நேர் செட்களில் வீழ்க்த்தினார். இரண்டாவது செட்டில் வோஸ்னியாக்கி சற்றே சவாலைச் சந்திக்க நேரிட்டது.

பிரான்ஸ் வீராங்கனை ஸ்டெபானி பாரெட்ஸ்-கேகோன் என்பவரை 6-0, 6- 1 என்று வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார் கிம் கிளைஸ்டர்ஸ்.

ஆஸ்ட்ரேலிய ஒயில்டு கார்டு வீராங்கனையான ஒலிவியா ரொகோவ்ஸ்கா என்பவரை லீ நா 6- 2, 6- 2 என்ற நேர் செட்களில் வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

இத்தாலிய வீராங்கனை பிரான்செஸ்கா ஷியாவோனி முதல் சுற்று ஆட்டத்தில் சக வீராங்கனை ரொமினா ஆப்ராண்டி என்பவரிடம் 6- 4, 6- 3 என்ற செட்களில் தோல்வி தழுவி அதிர்ச்சி வெளியேற்றம் கண்டார்.

செர்பியாவின் ஜெலெனா ஜான்கோவிச் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்