விளையாட்டு வீரர்கள் பயிற்சிக்கு மத்திய அரசு ரூ.678 கோடி உதவி!

வியாழன், 12 ஜூன் 2008 (15:32 IST)
2010 காமன் வெல்த் போட்டிகளுக்கு வீரர்களை தயார் படுத்தும் நோக்குடன் மத்திய அரசு ரூ.678 கோடியை பயிற்சிக்காக நிதி உதவி அறிவித்துள்ளது.

2010 காமன் வெல்த் போட்டிகளுக்காக இந்திய அணியை தயார் செய்யும் திட்டம் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழகூ‌ட்ட‌த்‌தி‌ல் ஒப்புத‌ல் அ‌ளி‌க்க‌ப்‌பட்டது.

இதனை இன்று நிதி அமைச்சர் ப. சிதம்பரம் செய்தியாளர்களிட‌ம் தெரிவித்தார்.

2008-09-ல் இந்த திட்டம் நடைமுறைபடுத்தப்படும் என்று கூறிய ப.சிதம்பரம், 3 ஆண்டுகள் இத்திட்டத்தின் கீழ் வீரர்களுக்கு பயிற்சி அளி‌க்கப்படும், குறிப்பாக காமன்வெல்த் இளைஞர் விளையாட்டுப் போட்டித் தொடர் உள்ளிட்ட பெரிய விளையாட்டு தொடர்களில் இந்திய வீரர்கள் பதக்கங்களை குவிக்க இந்த திட்டத்தின் மூலம் வழி வகை செய்யப்படுகிறது என்றார்.

வீரர்களுக்கான பயிற்சி இந்தியாவிலும், அய‌ல் நாட்டிலும் நடைபெறும் என்று கூறிய சிதம்பரம், முன்னணி விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் முக்கிய விளையாட்டுத் தொடர்களுக்கு பயிற்சி வசதிகளும் இத்திட்டத்தின் கீழ் செய்யப்படுகிறது என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்