விம்பிள்டன் டென்னிஸ்: நம்பர் 1 ஷரபோவா தோற்று வெளியேறினார்!

திங்கள், 2 ஜூலை 2012 (20:30 IST)
FILE
விம்பிள்டன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் 4வது சுற்று மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் உலகத் தரநிலை 1ஆம் இடத்தில் உள்ள ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா சாபைன் லிசிகியிடம் நேர் செட்களில் அதிர்ச்சித் தோல்வி அடைந்து வெளியேறினார்.

இதனால் லிசிகி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

தொடக்கம் முதலே ஷரபோவாவிற்கு கடும் பிரச்சனைகள் ஏற்படுத்திய சாபைன் லிசிகி 6- 4, 6- 3 என்ற நேர் செட்களில் ஷரபோவாவை ஊதித் தள்ளினார்.

முதல் செட்டில் 4 முறை லிசிகி டபுள் ஃபால்ட் செய்தார். ஆனால் அதனை ஷரபோவா சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. டபுள் ஃபால்ட் செய்தாலும் அடுத்தடுத்து விளையாடிய ஷாட்களில் ஆபாரம் காட்டினார் லிசிக்கி. முதல் செட்டில் 3 பிரேக் வாய்ப்புகளில் 2 முறை ஷரபோவா வெற்றி பெற்று முன்னிலை வகித்தாலும் லிசிகி தனக்க்கு கிடைத்த 5 பிரேக் வாய்ப்புகளில் 3ஐ வென்று முதல் செட்டை 6- 4 என்று கைப்பற்றினார்.

இரண்டாவது செட்டில் ஷரபோவாவின் சர்வ் கைகொடுக்கவில்லை முக்கியமான தருணங்களில் 3 முறை சர்வில் டபுள் ஃபால்ட் செய்து புள்ளிகளை லிசிக்கிக்கு தாரை வார்த்தார்.

மாறாக லிசிகி இரண்டாவது செட்டில் சர்வில் அபாரமாகத் திகழ்ந்ததுடன் டபுள் பால்ட் செய்யவில்லை. இரண்டாவது சர்விலும் பாதியை தனக்கு வெற்றியாக மாற்றினார்.

ஷரபோவா இரண்டாவது சர்வில் தவறுகள் செய்ததோடு, தெரியாமல் செய்த தவறுகளாக அதாவது நெட்டில் அடிப்பது, வெளியில் அடிப்பது என்ற வகையிலும் சரியாக ஆட முடியாமல் போனார்.

வெப்துனியாவைப் படிக்கவும்