பெர்த்: 2ஆம் நாள், 3ஆம் நாள் பேட்டிங்கிற்குச் சாதகமாக இருக்கும்

வியாழன், 12 ஜனவரி 2012 (15:42 IST)
பெர்த் ஆட்டக்களத் தயாரிப்பாளரான கேமரூன் சதர்லேண்ட், பிட்ச் பற்றி கூறுகையில் முதல் நாள் பந்து வீச்சிற்கு சாதகமாக இருக்கும் என்றும் இரண்டாம் நாள், 3ஆம் நாள் சற்றே பிட்ச் பேட்டிங்கிற்குச் சாதமகாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

ஆனால் டாஸ் வென்று முதலில் பேட் செய்தால் தோற்றுப்போகும் என்று அர்த்தமில்லை. மேலும் 4வது இன்னிங்ஸில் சற்றே கூடுதல் இலக்குகளையும் துரத்த முடியும் என்றார் சதர்லேண்ட்.

பிட்சில் புற்கள் அதிகம் இருந்தாலும் கடும் வெயிலால் புல்லில் நீர்ச்சத்து குறைந்து காய்ந்து கிடக்கிறது. ஆனாலும் அது வேகப்பந்து வீச்சிற்குச் சாதகமாக இருக்கும் என்பதில் மாற்றமில்லை.

இங்கிலாந்துக்கு எதிராக பெர்த் ஆட்டக்களம் முந்தைய பெர்த் ஆட்டக்களத்தை விட 20% அதிக வேகம் காட்டியது. அதுபோலவே இந்த முறையும் இருக்கும்.

புல்லின் தரம் மிகவும் உயர்ந்தது. எனவே கார்ப்பெட் போன்று இருந்தாலும் அதிகமாக வெயில் அடிப்பதால் பக்கவாட்டு ஸ்விங் அவ்வளவாக இருக்காது என்றார்.

கடந்த முறை இங்கிலாந்து தோற்ற ஒரே போட்டி பெர்த்தில்தான் இரண்டு இன்னிங்ஸ்களிலும் முறையே 187 மற்றும் 123 ரன்களை எடுத்துச் சுருண்டது இங்கிலாந்து, இதே முறையும் அது போன்ற வேகத்தை இந்த ஆட்டக்களம் காட்டும் என்கிறார் சதர்லேண்ட்.

விரல்களால் சுழற்பந்து வீசும் ஸ்பின்னர்களுக்கு சற்றே பயன் தரும் ஏனெனில் பவுன்ஸ் இருப்பதால் பயனளிக்கும், ஆனால் அதிகமாக பந்துகள் திரும்பாது. 4 வேகப்பந்து வீச்சாளர்களை வைத்துக் கொள்வது நல்ல தெரிவுதான்.

அணி மேலாளர்கள் பயிற்சியாளர்கள் ஆகியோர் பிட்ச் பற்றி என்னிடம் முன் கூட்டியே கேட்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆன்டி பிளவர் கேட்டார், ஏன் ஆஸ்ட்ரேலிய கேப்டன்களில் பலரும் என்னிடம் கேட்டுள்ளனர். தற்போது பிளெட்சர் நிறைய கேள்விகளைக் கேட்டார்.

கிரிக்கெட் வீரர்கள் பிட்ச் பற்றி கேட்பதை நான் பாராட்டுகிறேன். என்றார் சதர்லேண்ட்.

வெப்துனியாவைப் படிக்கவும்