பாக். தொடரை ரத்து செய்ய முடியாது!

செவ்வாய், 18 டிசம்பர் 2012 (12:32 IST)
பாகிஸ்தான் அமைச்சர் ரஹ்மான் மாலிக் இந்தியாவை தரக்குறைவாக பேசியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரை ரத்து செய்ய முடியாது என்று பிசிசிஐ கூறியுள்ளது.

தொடரை ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை. அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டாகிவிட்டது இனி ரத்து செய்ய முடியாது.

தொடர் திட்டமிட்டப்படி நடைபெறும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்