நியூஸீலாந்துக்கு எதிரான 4வது ஹாக்கிப் போட்டியிலும் இந்தியா வெற்றி

ஞாயிறு, 1 மார்ச் 2009 (18:34 IST)
நியூஸீலாந்து அணிக்கு எதிரான 4வது மற்றும் கடைசி ஹாக்கிப் போட்டியிலும் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் இத்தொடரை 2-0 என்ற போட்டிக் கணக்கில் இந்தியா ஹாக்கி அணி வென்றுள்ளது.

ஆக்லாந்து நகரில் நடந்த இப்போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. 2வது பாதியில் 43வது நிமிடத்தின் போது இந்திய அணியின் திர்கே தனக்குக் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை கோல் ஆக மாற்றினார்.

இதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் 67வது நிமிடத்தில் சந்தீப் சிங் அபாரமாக விளையாடி இந்திய அணிக்கு 2வது கோலை அடித்தார். இதன் மூலம் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்