தரவரிசையில் சானியா முன்னேற்றம்

செவ்வாய், 14 ஜூலை 2009 (10:21 IST)
மகளிருக்கான டென்னிஸஉலக தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா 85வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

உலக டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் தரவரிசைப் பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி இந்திய வீராங்கனை சானியா மிர்சா 86வது இடத்தில் இருந்து ஒரு இடம் முன்னேறி 85வது இடத்தை பெற்றுள்ளார். இரட்டையர் பிரிவில் சானியா ஒரு இடம் பின்தங்கி 42வது இடம் வகிக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்