செஸ் போட்டியின்போது போதையில் தூங்கிய பிரான்ஸ் செஸ் வீரர்

வெள்ளி, 4 செப்டம்பர் 2009 (15:56 IST)
பிரான்ஸின் முன்னணி செஸ் வீரரான கிராண்ட் மாஸ்டர் விளாடிஸ்லாவ் கச்சியேவ், இந்திய வீரர் பிரவீண் குமாருடன் செஸ் போட்டி ஒன்றில் பங்கேற்ற போது குடி போதையில் தூங்கிப் போனார். நிகழ்ச்சி ஒருங்கமைப்பாளர்கள் எப்படியெல்லாமோ அவரை எழுப்பிப் பார்த்து தோல்வி அடைந்தனர்.

கொல்கத்தாவில் நடந்த இந்த விசித்திர சம்பவத்தினால் இந்த சுற்று ஆட்டத்தில் அவர் தோல்வி அடைந்ததாக அற்விக்கப்பட்டது.

கடும் போதையில் இருந்த பிரான்ஸ் செஸ் வீரரால் நாற்காலியில் கூட உட்கார முடியவில்லை. செஸ் போட்டி நடக்கும் மேஜையில் உடனே தலை கவிழ்த்து உறங்கத் தொடங்கினார்.

அவர் தூங்கும் படத்தை இந்திய பத்திரிக்கைகள் வெளியிட்டுள்ளது. இந்த செஸ் வீரர் உலகத் தரவரிசையில் 58-வது இடத்தில் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்டம் நடக்கவிருந்த ஒன்றரை மணி நேரமும் அவரை உறக்கத்திலிருந்து ஒருவரும் எழுப்ப முடியவில்லை.

அதன் பிறகு கண் விழித்த அவருக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அவர் தொடர்ந்து இந்த செஸ் போட்டியில் பங்கேற்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்