செரினா-வீனஸ் இணை வெற்றி

ஞாயிறு, 25 ஜனவரி 2009 (16:20 IST)
ஆஸ்ட்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் 3வது சுற்றில் 10ம் தரவரிசையில் உள்ள செரீனா வில்லியம்ஸ் - வீனஸ் வில்லியம்ஸ் இணை வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்ட்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் 7வது நாளான இன்று நடந்த மகளிர் இரட்டையர் போட்டியில் ஆஸ்ட்ரேலிய இணையான சமந்தா ஸ்டோசர் - ரென்னி ஸ்டுப்பஸை 4-6, 2-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தி செரினா - வீனஸ் இணை காலிறுதிக்கு முன்னேறியது.

வெப்துனியாவைப் படிக்கவும்