இ‌ன்று செ‌ன்னை ‌திரு‌‌ம்பு‌கிறா‌ர் உலக சா‌ம்‌பிய‌ன் ஆனந்த்

சனி, 2 ஜூன் 2012 (10:41 IST)
இ‌ன்று இரவு செ‌ன்னை ‌திரு‌ம்பு‌ம் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கிராண்ட்மாஸ்டர் ‌வி‌ஸ்வநாத‌ன் ஆனந்து‌க்கு விமான ‌ிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்க‌ப்பட உ‌ள்ளது.

ர‌ஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த உலக செஸ் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், இஸ்ரேல் கிராண்ட்மாஸ்டர் போரிஸ் ஜெல்பான்ட்டை `டைபிரேக்கரில்' வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை 5வது முறையாக கைப்பற்றினார். தமிழகத்தை சேர்ந்த 42 வயதான ஆனந்த் தொடர்ந்து 4வது முறையாக மகுடம் சூடி நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

சர்வதேச செஸ் அரங்கில் முடிசூடா மன்னனாக விளங்கும் ஆனந்த், உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற பின்னர் தனது சொந்த ஊரான சென்னைக்கு இன்று இரவு 8.30 மணிக்கு திரும்புகிறார். எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் ர‌ஷ்யாவில் இருந்து சென்னை விமான நிலையம் வந்தடையும் ஆனந்துடன் அவரது மனைவி அருணாவும் வருகிறார்.

அவருக்கு, அகில இந்திய செஸ் சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு செஸ் சங்கம் ஆகியவை சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர்கள் பலரும் விமான நிலையத்துக்கு திரண்டு வந்து ஆனந்துக்கு வாழ்த்து தெரிவிக்க இருக்கிறார்கள்.

ஆனந்த் இன்று சென்னை வருவதை உறுதி செய்த அகில இந்திய செஸ் சம்மேளன தலைவர் ஜே.சி.டி.பிரபாகரன் எம்.எல்.ஏ.கூறுகையில், 'சென்னை விமான நிலையத்தில் ஆனந்துக்கு மிகச்சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. செஸ் ஆட்டத்துக்கு அதிக உதவியும், ஊக்கமும் அளித்து வரும் தமிழக முதல்வ‌ர் ஜெயலலிதாவை, ஆனந்த் சென்னை திரும்பியதும் சந்தித்து வாழ்த்து பெறுகிறார். அதன் பின்னர் ஆனந்துக்கு பாராட்டு விழா நடத்துவது பற்றி முடிவு செய்யப்படும்' என்று தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்