இந்த ஆண்டில் அதிக ரன்கள்: டிராவிட் முதலிடம்

வெள்ளி, 18 நவம்பர் 2011 (11:17 IST)
FILE
கிரிக்கெட்டில் இந்த ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் டிராவிட் முதலிடம் வகிக்கிறார்.

டிராவிட் 10 டெஸ்ட் போட்டிகளில் (19 இன்னிங்ஸ்கள்) விளையாடி 952 ரன்கள் குவித்து முதலிடம் பிடித்துள்ளார்.இதில் 5 சதம், 2 அரை சதம் அடங்கும்.

இவருக்கு அடுத்தப்படியாக இங்கிலாந்தின் இயான்பெல் 8 போட்டிகளில் (11 இன்னிங்ஸ்கள்) விளையாடி 950 ரன்கள் குவித்து 2-வது இடம் பெற்றுள்ளார். இதில் 5 சதம் 2 அரை சதம் அடங்கும்.

3-வது இடத்தை இங்கிலாந்தின் அலாஸ்டயர் குக் பிடித்துள்ளார். இவர் 8 போட்டிகளில் (11 இன்னிங்ஸ்கள்) விளையாடி 4 சதம் 2 அரை சதங்களுடன் 927 ரன்கள் குவித்துள்ளார்.

அதிக விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளர்களில் இந்தியாவின் இஷாந்த் சர்மா 2-வது இடத்தில் உள்ளார். அவர் 10 போட்டிகளில் விளையாடி 40 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

பாகிஸ்தானின் சயீத் அஜ்மல் 6 போட்டிகளில் 41 விக்கெட் வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். வெஸ்ட் இண்டீஸ் வீரர் தேவேந்திர பிஷூ 9 போட்டிகளில் 36 விக்கெட் வீழ்த்தி 3-வது இடத்தில் உள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்