ஃபெடரருக்கு 1,500 டாலர்கள் அபராதம்

வெள்ளி, 18 செப்டம்பர் 2009 (11:47 IST)
யு.எஸ். ஓபன் இறுதிப் போட்டியில் நடுவருடன் சர்ச்சைக்குரிய விவாதத்தில் ஈடுபட்டதால் சுவிஸ் வீரர் ரோஜர் ஃபெடரருக்கு யு.எஸ். ஓபன் டென்னிஸ் அமைப்பு 1,500 அமெரிக்க டாலர்களை அபராதமாக விதித்துள்ளது.

இறுதிப் போட்டியில் அர்ஜென்டீன வீரர் டெல் போட்ரோ, 10 வினாடிகள் கழித்து மேல் முறையீடு செய்தாலும் ஏற்கப்படுகிறது. தனக்கு இரணு வினாடிகள் கழித்துக்கூட மேல் முறையீட்டிற்கு அனுமதிப்பதில்லை என்று குற்றம்சாட்டிஅ ஃபெடரர், மைதானத்தில் நடுவரிடம் காரசார்மான விவாதத்தில் இறங்கினார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் செய்தித் தொடர்பாளர் இது பற்றி கூறுகையில் செரீனா வில்லியம்ஸ், வெரா ஸ்வொனரேவா, டேனியல் கல்லரர், டேனியல் நெஸ்டர் ஆகியோர் நடந்து கொண்ட விதத்திற்காக அவர்கள் மீது விதிக்கப்பட்ட அபராதத் தொகை என்ற விதத்தில் 31,500 டாலர்கள் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்