தோனி ஒழித்தது தினேஷ் கார்த்திக்கையா, யுவ்ராஜ் சிங்கையா?

வெள்ளி, 10 ஜனவரி 2014 (17:40 IST)
ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக ஒரேயொரு T20 போட்டியில் அதிரடி வீரம் காட்டிய யுவ்ராஜ் சிங் அதன் பிறகு ஒருநாள் போட்டித் தொடரில் மிட்செல் ஜான்சனிடம் மண்ணைக்கவ்வினார். இதனால் அவரது ஆட்டம் மீது சந்தேகம் எழ நியூசீ.தொடரிலிருந்து யுவ்ராஜ் நீக்கப்பட்டார்.
FILE

ஆனால் அவர் அணியில் வேண்டும் என்று தோனி நிற்கவில்லையாம்! யுவ்ராஜ் சிங் வேண்டாம் என்று தோனி கூறியதாக பிசிசிஐ-யின் வட்டாரங்கள் தெரிவித்ததாக ஆங்கில ஊடகம் ஒன்று கிசுகிசுக்கிறது.

ஆஸ்ட்ரேலியாவுடன் சரியாக ஆடாவிட்டாலும் தோனி அவரை மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளிலும் அவரை தேர்வு செய்தார். ஆனால் பலன் இல்லை. அதே அவுட் சைட் த ஆஃப் ஸ்டம்ப் பிரச்சனை அவரிடம் தொடர்ந்தது.

ரெய்னாவும்தான் தோல்வியடைந்தார், ஆனால் அவர் 2015 உலகக் கோப்பை திட்டவட்டத்தில் இருக்கிறாராம்! யுவ்ராஜ் சிங்கை நீக்கியது சரிதான்! யுவ்ராஜை நீக்கியவுடன் தோனிதான் காரணமா என்று யுவ்ராஜுக்கு வேண்டப்பட்ட ஊடகங்கள் லாபி செய்யக் கிளம்பியுள்ளது.
FILE

ஆனால் யுவ்ராஜ் சிங் அணிக்குள் வந்ததே நல்ல ஃபார்மில் இருந்த பரிதாபத்திற்குரிய தினேஷ் கார்த்திக்கை வெளியேற்றிதான் என்பதை எந்த ஊடகமும் பேசுவதில்லை.

டெஸ்ட் அணியில் தொடர்ந்து கவைக்குதவாத ரித்திமான் சஹாவை தோனி தேர்வு செய்து வருகிறார். காரணம் தினேஷ் கார்த்திக் டெஸ்ட் அணியில் இருந்தால் டெஸ்ட் பேட்டிங்கில் கண்டபடி சொதப்பி வரும் தோனியின் இடமே கேள்விக்குள்ளாகிவிடும் என்பதுதான்.

ரோகித் சர்மாவை துவக்க வீரராக புரோமோட் செய்ததே தினேஷ் கார்த்திக்கை அணியில் தேர்வு செய்துவிட்டால் அவரை துவக்க வீரராக களமிறக்காமல் அடிக்கத்தான். இங்குதாந்ன் தோனியின் அதிர்ஷ்டம் இருக்கிறது. ரோகித் சர்மா ஒருநாள் போட்டி துவக்க வீரராக ஜெயித்து விட்டார். தென் ஆப்பிரிக்காவில் அவர் வழிந்து விட்டார். நியூசீலாந்தின் ஸ்விங், மற்றும் பலத்த காற்றில் அவர் எப்படி விளையாடுகிறார் என்று பார்க்க ஆர்வமாகவே உள்ளது.

இப்போதும் கூட...

FILE
முரளி விஜய்யைக் காட்டிலும் தினேஷ் கார்த்திக்தான் நல்ல டெஸ்ட் துவக்க வீரராக ஜொலிக்க முடியும். ஏனெனில் இங்கிலாந்தில் அவரும் வாசிம் ஜாபரும் துவக்க வீரர்களாக 50 ரன்கள் சராசரி வைத்திருந்தனர். ஆனால் 4- 0 உதை வாங்கிய தொடரில் ஸ்ரீகாந்த், முகுந்த்தை தேர்வு செய்தார், தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்படவில்லை.

முன்பு ஒரு காலத்தில் மொகீந்தர் அமர்நாத்தை இப்படித்தான் செய்தார்கள், ஆனால் அவர் ஓயாத போராளி மீண்டும் மீண்டும் உள்நாட்டு கிரிக்கெட்டில் தன்னை நிரூபித்து மீண்டும் அணிக்குள் வந்து கவாஸ்கருக்கு இணையாக தன்னை நிரூபித்திருக்கிறார். மொகீந்தர் அளவுக்கு ஒருவர் எந்த அணியிலிருந்தும் நீக்கப்பட்டு, மீண்டும் வந்த விரர் கிடையாது என்றே கூறிவிடலாம். ஆனால் அப்போது கூட அணிக்கு திரும்பி விட முடியும் என்ற நம்பிக்கை மொகீந்தருக்கு இருந்தது. ஆனால் இப்போது ரஞ்சியில் தமிழ்நாட்டிற்காக அபாரமாக ஆடியும் அவரால் இந்திய அணிக்குள் இனி நுழைய முடியுமா என்பது சந்தேகமே.

அப்போது ஓரளவுக்கு வேண்டப்பட்டவர்கள் தேர்வு செய்யப்படுவது என்ற நிலை இருந்தாலும் கிரிக்கெட் மீது ஓரளவுக்கு அக்கறை இருந்தது. இப்போது பிசிசிஐ-யிற்கு பணத்தின் மீதுதான் அக்கறை இருக்கிறது. பணத்தாசையை தன்னோடு மட்டும் நிறுத்தாமல் வீரர்களிடத்திலும் அந்த ஆசையை நிரப்பியுள்ளதுதான் பிசிசிஐ-யின் சாதன

ஆனால் தோனிக்கும் தனது கரியர் பற்றிய 'விழிப்புணர்வு' உண்டு. ஸ்பான்சர்களுடனான 'கமிட்மென்ட்' இருக்கத்தானே செய்கிறது?

வெப்துனியாவைப் படிக்கவும்