சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா கொடுக்கலாமா?

வெள்ளி, 22 நவம்பர் 2013 (17:21 IST)
தலைப்பில் உள்ளதுபோல் கேள்வி கேட்டு கட்டுரை எழுதினால் சச்சின் பக்தர்கள் நம்மை உரித்து எடுத்து விடுவார்கள் என்று தெரியும்! ஆனால் உண்மை, வெறியை விட வித்தியாசமானது. அவரது இந்திய தேச பக்தி, நாட்டுப்பற்று இவையெல்லாம் குறை கூற இடமில்லை என்றாலும், பாரத ரத்னாவுக்கு அவர் எந்த அடிப்படையில் தகுதியற்றவர் என்பதை பார்ப்போம்!
FILE

சச்சின் டெண்டுல்கர் இந்தியாவுக்காக கடந்த 24 ஆண்டுகள் விளையாடியுள்ளார். சரிதானே! ஆனால் இது தவறு. டெக்னிக்கலாக அவர் பிசிசிஐ-யிற்குத்தான் விளையாடியுள்ளார். பிசிசிஐ-யைத்தான் பிரதிநிதித்துவம் செய்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமே தன்னை பல முறை தன்னை தனியார் அமைப்பு என்றே அங்கீகரித்துள்ளது.

மேலும்

பிசிசிஐ தமிழ்நாடு சொசைட்டீஸ் ரெஜிஸ்ட்ரேஷன் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிசிசிஐ தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் வருவதல்ல. இதனால் அதன் செயல்பாடுகளுக்கு பொதுமக்களிடத்தில் பதில் கூற வேண்டியத் தேவையில்லை.
FILE

எனவே சச்சின் டெண்டுல்கர் இந்தியாவுக்காக விளையாடினாலும், டெக்னிக்கலாக கூறவேண்டுமெனில் அவர் இந்தியாவுக்கு விளையாடவில்லை என்றே கூறவேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் ரூ.2 கோடி வருமான வரியை தவிர்க்க அவர் தனது தொழில் விளம்பரத்தில் நடிப்பதே என்று வெளிப்படையாக கூறினார். இ.எஸ்.பி.என். ஸ்டார் ஸ்போர்ட்ஸ், பெப்சி அன்ட் கோ ஆகியவற்றின் மூலம் ரூபாய் 5 கோடியே, 92 லட்சத்து 31 ஆயிரத்து 211 சம்பாதித்தார். அதற்காக அவருக்கு ரூ.2,08,59,707 வருமான வரி விதிக்கப்பட்டது.

இந்த வருமான வரி கட்ட வேண்டிய உத்தரவை சச்சின் சாலஞ்ச் செய்தார். அப்போது அதை விசாரித்த நீதிபதிகள் குழு சச்சின் ஒரு கலைஞர் மாடெலிங் அவரது தொழில் எனவே அவர் வருவாய்களில் விலக்குகள் கொடுக்கப்படவேண்டும் என்று தீர்ப்பளித்தது.

வருமானவரிச் சட்டம் 80RR - இன் படி கலைஞர்களுக்கு வருமான வரியில் சலுகைகள் உண்டு. சச்சின் அந்த அடிப்படையில் 2 கோடி வரிவிதிப்பில் சலுகைகளைப் பெற்றார். வருமான வரி மதிப்பீட்டு அதிகாரி சச்சினிடம் உங்கள் தொழில் என்ன என்று கேட்டதற்கு அவர் "நான் ஒரு பிரபல மாடல், பல்வேறு நிறுவனங்களின் வர்த்த்கப் பொருட்களுக்கு விளம்பரம் செய்கிறேன்" என்று எழுதிக் கொடுத்துள்ளார்.

இதுபோன்ற விளம்பர வருவாயை சச்சின் "வர்த்தகம் மற்றும் தொழில்" மூலம் வந்த வருவாயாகவும், கிரிக்கெட் ஆடி சம்பாதித்த பணத்தை 'பிற ஆதாரங்களிலிருந்து வந்த வருவாய்' என்றும் பிரித்துக் காட்டினார். அதாவது தான் தொழில் பூர்வமாக கிரிக்கெட் வீரர் அல்ல. ஒரு மாடல் என்று சச்சினே ஒப்புக் கொண்டுள்ளார்.

பிறகு...

சச்சினின் கனவுக் கார் பெராரி ஃபியாஸ்கோ கதை எல்லோரும் அறிந்ததே. இறக்குமதித் தீர்வையில் அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டது பெரும் சர்ச்சைகளை அப்போது கிளப்பியது. ஆனால் விஷயம் இப்போது அதுவல்ல, அவ்வாறு விலக்கு அளிக்கப்பட்ட அதே காரை சச்சின் டெண்டுல்கர் சூரத்தை சேர்ந்த வியாபாரி ஒருவருக்கு விற்றுள்ளார். தனக்கு 'பரிசாக' வந்த காரை விற்று சம்பாதித்த வருவாயும் வரியிலிருந்து தப்பித்ததுதான் விஷயம்.
FILE

தேர்தல் வருவதால் சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா வழங்குவதாக நடப்பு ஆட்சி ஒரு ஸ்டண்ட் முடிவெடுத்தது அவ்வளவே. ஏற்கனவே உள்துறை அமைச்சகமும், விளையாட்டுத் துறை அமைச்சகமும் ஹாக்கி வீரர் மேஜர் தயான் சந்திற்கு பாரத ரத்னா வழங்கவேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது தற்போது பின்னுக்குத்தள்ளப்பட்டுள்ளது.

செஸ் மேதை விஸ்வநாதன் ஆனந்த் அனைத்து உலக செஸ் சாம்பியன்ஷிப் ஃபார்மேட்டுகளிலும் பட்டம் வென்றுள்ளார். அவருக்கு ஏன் கொடுக்கக்கூடாது என்று கேள்விகள் தர்போது எழுந்து வருகின்றன.

சச்சின் ஓய்வை வைத்து பிசிசிஐ-யும் ஸ்டார் ஸ்போர்ட்ஸும் கல்லா கட்டியதையடுத்து ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சச்சின் பாரத ரத்னாவை அறிவித்து வாக்கு வங்கியாக மாற்றியுள்ளது அவ்வளவே.

வெப்துனியாவைப் படிக்கவும்