கொல்கட்டாவிற்கு இனி மேட்ச் கொடுக்கமாட்டோம்- பிசிசிஐ ரகசிய மிரட்டல்?

சனி, 8 டிசம்பர் 2012 (17:58 IST)
FILE
கொல்கட்டா பிட்ச் தயாரிப்பாளரான முகர்ஜி இந்தியாவுக்கு சாதகமான அல்லது தோனி கேட்கும் பிட்சை போடவேண்டும் இல்லையெனில் அவரை உடனடியாக நீக்கு இல்லையெனில் கொல்கட்டாவிற்கு இனி போட்டிகளை அனுமதிக்க மாட்டோம் என்று பிசிசிஐ தலைமை பெங்காள் கிரிக்கெட் சங்கத்தை ரகசியமாக மிரட்டியதாக பத்ரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் ஸ்ரீனிவாசன், ஈடன் பிட்ச் பற்றி தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். ஆனால் முகர்ஜி இது பற்றி தனக்கு எந்த கவலையும் இல்லை என்று கூறியுள்ளார்.

"ஸ்ரீனிவாசன் என்னவேண்டுமானாலும் கூறிகொள்ளட்டும், நான் அவர் கூறுவதையெல்லாம் பொருட்படுத்தமாட்டேன். பிட்ச் தயாரிக்கும் முன் நான் பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவரிடம் கூட ஆலோசிக்க மாட்டேன், எனக்கு பிட்ச் பற்றிய அறிவு உண்டு அதன் படியே நான் செயல்படுவேன்." என்று தைரியமாக அடிட்துள்ளார் முகர்ஜி.

ஆனால் பெங்கால் கிரிக்கெட் சங்கத்தில் பெயர் கூறவிரும்பாத அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி இணையதளத்தில் வந்த செய்தி வருமாறு:

அதாவது ஸ்ரீனிவாசன், ஈடன் பிட்ச் குறித்து அதிருப்தி அடைந்திருப்பதாகவும், பிட்ச் தயாரிப்பாளர் முகர்ஜி ஒன்று சொல்வதைக் கேட்கவேண்டும், அல்லது அவரை நீக்குக என்று கூறியதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இப்போது முகர்ஜி மீது பெங்கால் கிரிக்கெட் சங்கம் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் கொல்கட்டாவுக்கு போட்டிகளை கொடுக்க பிசிசிஐ மறுக்கும் என்றும் ஏற்கனவே இருந்த சர்ச்சைகளினால் போட்டிகள் கிடைக்காமல் இப்போதுதான் பெங்காஅலுகும் பிசிசிஐ-யிற்கும் சுமுக போக்கு இருக்கிறது.

மீண்டும் ஒரு சண்டை வந்து போட்டிகளை பெங்கால் கிரிக்கெட் சங்கம் இழக்க விரும்பவில்லை என்றும் பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைமை டால்மியா நினைப்பதாகவும் அந்த அதிகாரி கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது போன்ற ஆட்டக்களங்களினால் உள்நாட்டு சாதகச் சூழ்நிலை இந்தியாவுக்கு கிடைக்காமல் போய்விடும். அதனால் இந்தப் போக்கை பொறுத்துக் கொள்ள முடியாது எனவே அவ்ரை (முகர்ஜியை) பணியச் சொல் அல்லது நீக்கி விடவும் என்று ச்ரீனிவாசன் கூறியதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்தியா கொல்கட்டா டெஸ்டை தோற்கவுள்ள நிலையில் பிட்ச் சர்ச்சை பூதாகரமாக கிளம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்